;
Athirady Tamil News

யாழில் இரட்டை குழந்தைகளில் ஒன்று திடீர் உயிரிழப்பு; துயரத்தில் பெற்றோர்

0

யாழில், பிறந்து 43 நாட்களேயான பெண் குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளது. சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

கடந்த 19.02.2025 அன்று இளவாலை – உயரப்புலத்தை சேர்ந்த வசிக்கும் பெண்ணொருவருக்கு ஏழு மாதங்களில் ஆண் , பெண் இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது.

கண்ணாடி பெட்டியில் ஆண் குழந்தை
இந்நிலையில் இரட்டை குழந்தைகளில் ஆண் குழந்தை தெல்லிப்பழை வைத்தியசாலையில் கண்ணாடி பெட்டியில் வைத்து கண்காணிக்கப்பட்டு வந்தது. பின்னர் 28.03.2025 அன்று பெண் குழந்தையும் தாயும் வீடு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

ஆண் குழந்தை தொடர்ந்தும் வைத்தியசாலையில் கண்ணாடிப் பெட்டியில் வைத்து கண்காணிக்கப்பட்டது. இந்நிலையில் தாயார் தினமும் வைத்தியசாலைக்கு வருகை தந்து ஆண் பிள்ளைக்கு பாலூட்டி வந்துள்ளார்.

குறித்த பெண் குழந்தைக்கு தாயார் இன்று காலை வீட்டில் வைத்து பாலூட்டியுள்ளார். இந்நிலையில் காலை 6.00 மணியளவில் பெண் குழந்தைக்கு வயிற்றோட்டம் ஏற்பட்ட நிலையில் குழந்தை மயங்கியது.

இதனையடுத்து குழந்தையை தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை குழந்தை உயிரிழந்தாக கூறப்படுகின்றது.

குழந்தையின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். மேலும் உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.