இலங்கையின் 17 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை; வெளியான அறிவித்தல்!

நாட்டின் மேற்கு, சப்ரகமுவ, வடமேற்கு, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்கள் மற்றும் காலி, மாத்தறை, மொனராகலை மற்றும் மாத்தளை மாவட்டங்களுக்கு கடுமையான மின்னல் தாக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.
அதன்படி இன்று இரவு 11.00 மணி வரை வானிலை முன்னறிவிப்பு அமுலில் இருக்கும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன் இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என்று திணைக்களம் எச்சரித்துள்ளது.
எனவே , மின்னல் தாக்கத்தால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது.