பிரித்தானியாவில் முழு நேரப் பணியாளர்கள் 300,000 பேருக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி

ஏப்ரல் மாதம் 1ஆம் திகதி, தேசிய வாழ்வாதார ஊதிய உயர்வு அமுலுக்கு வந்துள்ளதையடுத்து, பிரித்தானியாவில் முழு நேரப் பணி செய்வோருக்கு ஊதிய உயர்வு கிடைக்க உள்ளது.
குறைந்தபட்ச ஊதிய உயர்வு
பிரித்தானியாவில் முழு நேரப் பணி செய்வோருக்கு இந்த மாதம் முதல் 117 பவுண்டுகள் ஊதிய உயர்வு அளிக்கப்பட உள்ளது.
21 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஒரு மணி நேர ஊதியம் 11.44 பவுண்டுகளிலிருந்து 12.21 பவுண்டுகளாக உயர உள்ளது.
18 முதல் 20 வயதுடையவர்களுக்கு, குறைந்தபட்ச ஊதியம், ஒரு மணி நேரத்துக்கு 8.60 பவுண்டுகளிலிருந்து 10.00 பவுண்டுகளாக உயர உள்ளது.
கடினமாக உழைக்கும் மூன்று லட்சம் குறைந்த வருவாய் கொண்ட பணியாளர்களுக்கு இந்த ஊதிய வழங்கப்படுவதாக பிரித்தானிய துணைப் பிரதமரான ஏஞ்சலா ரேய்னர் தெரிவித்துள்ளார்.
இந்த குறைந்தபட்ச ஊதிய உயர்வு காரணமாக, தோராயமாக, ஆண்டொன்றிற்கு 1,400 பவுண்டுகள் முதல் 2,500 பவுண்டுகள் வரை பணியாளர்கள் பெற உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.