;
Athirady Tamil News

ஆஸ்திரேலியாவில் காட்டுத் தீ! மக்கள் வெளியேற்றம்!

0

ஆஸ்திரேலியாவின் மேற்கு மாகாணத்தில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயினால் அப்பகுதி மக்கள் உடனடியாக வெளியேற அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேற்கு ஆஸ்திரேலிய மாநிலத்தின் தலைநகரான பெர்த் நகரத்தின் புறநகரின் வனப்பகுதியில் நேற்று (ஏப்.3) அதிகாலை 4 மணியளவில் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு தீயணைப்புப் படையினருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, ஃபெர்னாண்டெல் பகுதியில் உண்டான காட்டுத் தீயானது வடமேற்கு திசையில் நகர்ந்து அருகிலுள்ள கேனிங் ஆற்று பகுதியில் பரவியுள்ளது.

இதுகுறித்து காலை 7 மணியளவில் அம்மாநில தீயணைப்புப் படை வெளியிட்ட அறிக்கையில், காட்டுத் தீயினால் மக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாகவும், பாதைகள் தெளிவாகயிருந்தால் அப்பகுதிவாசிகள் உடனடியாக வெளியேறி மேற்கு திசையில் பாதுகாப்பான இடத்தை நோக்கி செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இருப்பினும், உடனடியாக வெளியேற முடியாத மக்கள் தண்ணீர் வசதியுள்ள அறையில் பாதுகாப்பாக தஞ்சமடையுமாறு கூறப்பட்டிருந்தது.

பின்னர், காலை 8 மணியளவில் இந்தக் காட்டுத் தீயினால் மக்களின் வீடுகளுக்கோ அல்லது உயிர்களுக்கோ எந்தவொரு அச்சுறுத்தலும் இல்லை எனக் கூறி தீயணைப்புப் படை தனது செயல்பாடுகளைக் குறைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ஆனால், மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் சரிந்துள்ளதால் பாதுகாப்பு கருதி அங்கிருந்து வெளியேறிய மக்கள் உடனடியாக திரும்ப வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, இந்தக் காட்டுத் தீயானது அதிகாலை 4 மணியளவில் கேனிங் ஆற்றின் கரையில் அமைந்துள்ள பாதுகாக்கப்பட்ட பூங்காவிலிருந்து துவங்கியதாகக் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.