;
Athirady Tamil News

மனிதர்களே வசிக்காத தீவுக்கும் வரி விதித்த டிரம்ப்

0

அமெரிக்க அதிபர் டிரம்ப், உலக நாடுகள் மீது பரஸ்பர வரி விதிப்பை அமல்படுத்தியுள்ளார்.

டிரம்ப்பின் பரஸ்பர வரி
சில நாடுகளுக்கு அடிப்படை வரியாக 10% இறக்குமதி வரி முதல் அதிகபட்சமாக செயிண்ட் பியர் மற்றும் மிக்குயலான் தீவுக்கு 50% வரியும் விதித்துள்ளார்.

இதில், இந்தியாவிற்கு 26%, ஐரோப்பிய நாடுகளுக்கு 20%, இலங்கைக்கு 44%, சீனாவிற்கு 34% என அறிவித்துள்ளது.

ரஷ்யா, வட கொரியா போன்ற நாடுகளுடன் வர்த்தகம் செய்யாததால், அந்த நாடுகள் இந்த பட்டியலில் இடம் பெறவில்லை.

இந்த வரி விதிப்பிற்கு பல்வேறு நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அடிப்படை வரிகள் ஏப்ரல் 5 ஆம் திகதி முதலும், பரஸ்பர வரி ஏப்ரல் 9 ஆம் திகதி முதலும் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மனிதர்கள் வசிக்காத தீவுக்கும் வரி
இந்த வரி விதிப்பில் மக்கள் யாரும் வசிக்காத அண்டார்டிகா அருகே உள்ள ஹெர்டு மற்றும் மெக்டொனால்டு தீவுகளுக்கும்(heard and mcdonald islands) 10% வரி விதித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவில் உள்ள பெர்த்தில் இருந்து 2 வாரம் படகு பயணம் செய்து இந்த தீவை அடைய முடியும்.

இந்த தீவில் பெங்குயின்கள், நீர் நாய்கள் மற்றும் பல்வேறு பறவை இனங்கள் உள்ளன. அவற்றில் சில தேசிய மற்றும் சர்வதேச பாதுகாப்பு அந்தஸ்தைப் பெற்றுள்ளன.

எரிமலை தீவுகளான இந்த இரு தீவுகளையும் அவுஸ்திரேலியா நிர்வாகம் செய்து வருகிறது.

மக்கள் யாருமே வசிக்காத இந்த தீவுகளின் மீது 10% இறக்குமதி வரி விதித்தது ஏன் என்பது குறித்து, அமெரிக்கா எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவுஸ்திரேலியா பிரதமர் அந்தோணி அல்பானீஸ், “பூமியில் எங்கும் பாதுகாப்பு இல்லை. ட்ரம்ப் நிர்வாகத்தின் கட்டணங்கள் தர்க்கரீதியான அடிப்படையைக் கொண்டிருக்கவில்லை.

மேலும் அவை நமது இரு நாடுகளின் கூட்டாண்மையின் அடிப்படைக்கு எதிரானவை. இது ஒரு நண்பரின் செயல் அல்ல,” என்று கூறினார்.

அந்த நாடுகளில் எந்த பொருளும் உற்பத்தி செய்யப்படாத நிலையில், அங்கு வரி விதித்தது ஏன் சமூகவலைத்தளத்தில் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.