;
Athirady Tamil News

இளநீர் குடித்ததால் பறிப்போன முதியவரின் உயிர்! டென்மார்க்கில் நடந்த சோகம்

0

குளிர்சாதனப் பெட்டியில் வைக்காத இளநீர் குடித்த 69 வயது முதியவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டென்மார்க்கில் நடந்த சோகம்
டென்மார்க்கைச் சேர்ந்த 69 வயது நபர் ஒருவர் குளிர்சாதனப் பெட்டியில் வைக்காமல் கெட்டுப்போன இளநீரை குடித்ததால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அவர் குடித்த இளநீர் துர்நாற்றம் வீசியதுடன், தேங்காயின் உட்புறம் வழுவழுப்புடனும், அழுகிய நிலையிலும் இருந்துள்ளது.

உடலில் ஏற்பட்ட அதிர்ச்சிகரமான விளைவுகள்
இளநீரை குடித்த சில மணி நேரங்களிலேயே அந்த நபருக்கு அதிக வியர்வை, குமட்டல் மற்றும் வாந்தி போன்ற அறிகுறிகள் தோன்றியுள்ளன.

அத்துடன் அவரது உடல்நிலை மிக மோசமாகி, குழப்பம், உடல் சமநிலை இழப்பு மற்றும் தோல் வெளிறியது ஆகியவை தோன்றியதோடு மருத்துவப் பரிசோதனையில் அவருக்கு மூளையில் கடுமையான வீக்கம் இருப்பது கண்டறியப்பட்டது.

வளர்சிதை மாற்ற என்செபலோபதி காரணமாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், மருத்துவமனையில் சேர்ந்த 26 மணி நேரத்திற்குள் அவர் மூளைச்சாவு அடைந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்கள்
2021ம் ஆண்டு நடந்த இந்த சம்பவம், “எமர்ஜிங் இன்ஃபெக்சியஸ் டிசீசஸ்” என்ற மருத்துவ இதழில் வெளியானதை அடுத்து தெரியவந்துள்ளது.


அந்த தேங்காய் ஒரு மாதத்திற்கு முன்பு வாங்கப்பட்டு, சமையலறை மேசையில் அறை வெப்பநிலையில் வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

உயிரிழந்த நபர் தேங்காயிலிருந்து நேரடியாக உறிஞ்சு குழாய் மூலம் சிறிதளவு இளநீரை மட்டுமே குடித்துள்ளார், அப்போதே அதன் விரும்பத்தகாத சுவையை உணர்ந்த அவர் தேங்காயைத் திறந்ததும், உட்புறம் வழுவழுப்புடனும், அழுகிய நிலையிலும் இருந்ததை அவர் தனது மனைவியிடம் தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூரைச் சேர்ந்த டாக்டர் சாமுவேல் சௌத்ரி கூறுகையில், “திறக்கப்பட்ட தேங்காய்களை (வெள்ளை சதைப்பகுதி வெளியே தெரிந்தால்) கட்டாயம் குளிர்சாதனப் பெட்டியில் வைக்க வேண்டும்.

அவற்றின் ஆயுட்காலம் மிகக் குறைவு. முழுமையாக மூடப்பட்ட தேங்காய்களை அறை வெப்பநிலையில் சில மாதங்கள் வரை வைக்கலாம்.” என தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.