;
Athirady Tamil News

அவனை விட்டுவிடாதீர்கள்… சுவரில் எழுதிவைத்துவிட்டு தன் உயிரை மாய்த்துக்கொண்ட இளம்பெண்

0

மேற்கு டெல்லியில், வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்காததுடன், தன்னை துன்புறுத்தியும் வந்த ஒருவரை விடவேண்டாம் என சுவரில் எழுதிவைத்துவிட்டு, தன் உயிரைத் தானே மாய்த்துக்கொண்டுள்ளார் ஒரு இளம்பெண்.

அவனை விட்டுவிடாதீர்கள்…
மேற்கு டெல்லியில் உள்ள உத்தம் நகர் என்னுமிடத்தில், தன் தாய் மற்றும் சகோதரிகளுடன் வாழ்ந்துவந்துள்ளார் 27 வயது இளம்பெண் ஒருவர்.

கடந்த சனிக்கிழமை இரவு அவரது சகோதரி வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பும்போது, தன் தங்கை தூக்கிட்டு தன் உயிரை மாய்த்துக்கொண்டுள்ளதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

உடனடியாக பொலிசார் வீட்டுக்கு வரவழைக்கப்பட, வீட்டுக்குள் சுவரில் ஒரு மொபைல் எண்ணும், அதன் அருகில் அவனை விடவேண்டாம் என்றும் எழுதப்பட்டுள்ளதை பொலிசார் கண்டுள்ளார்கள்.

அத்துடன், தான் தன் உயிரை மாய்த்துக்கொண்டது ஏன் என்பதை விவரமாக ஒரு கடிதத்தில் எழுதியும் வைத்துள்ளார் அந்தப் பெண்.

அந்தக் கடிதத்தில் என்ன எழுதப்பட்டுள்ளது?
அதாவது, அந்தப் பெண் முன்னர் பணி செய்த இடத்தில் அவருடன் பணி செய்த ஒருவருக்கு, அவரது தாயின் மருத்துவ செலவுக்காக சுமார் 2 லட்ச ரூபாய் கடனாகக் கொடுத்துள்ளார்.

ஆனால், அந்த நபர் வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்கவேயில்லையாம். அத்துடன், கடனைக் கேட்டதற்காக கடந்த சில வாரங்களாக அந்தப் பெண்ணுக்கு அந்த நபர் தொந்தரவும் கொடுத்துவந்தாராம்.

ஆகவேதான் அவர் தன் உயிரை மாய்த்துக்கொண்டதாக அந்தப் பெண்ணின் தங்கையும் பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.

சம்பந்தப்பட்ட நபர் குடும்பத்துடன் தலைமறைவாகிவிட்ட நிலையில், பொலிசார் அவர்களைத் தீவிரமாகத் தேடிவருகிறார்கள்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.