;
Athirady Tamil News

ஊழியர்களின் கைகளில் ரத்தக் கறை: மைக்ரோசாஃப்ட் ஆண்டுவிழாவில் இஸ்ரேலுக்கு எதிராக போராட்டம்

0

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் 50 ஆவது ஆண்டு விழாவில் இஸ்ரேலுக்கு எதிராக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் 50 ஆவது ஆண்டு விழா, வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இணை நிறுவனர் பில்கேட்ஸ், முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்டீவ் பால்மர், தற்போதைய தலைமை நிர்வாக அதிகாரியும் இந்திய வம்சாவளியுமான சத்யா நாதெல்லாவும் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில், இஸ்ரேலுக்கு செயல் நுண்ணறிவு தொழில்நுட்பச் சேவையை வழங்கியதை எதிர்த்து, நிகழ்ச்சியில் மைக்ரோசாஃப்ட் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நிகழ்ச்சியில் மைக்ரோசாஃப்ட் செயல் நுண்ணறிவு துறையின் தலைமை நிர்வாக அதிகாரி முஸ்தபா சுலைமான் உரையாற்றியபோது, அவரது உரையைத் தடுத்த சில ஊழியர்கள் கூறியதாவது, செயல் நுண்ணறிவைப் பயன்படுத்துவதில் அக்கறை இருப்பதாக கூறுகிறீர்கள்; ஆனால், செயல் நுண்ணறிவு ஆயுதங்களை இஸ்ரேல் ராணுவத்துக்கு மைக்ரோசாஃப்ட் விற்கிறது.

ஐம்பதாயிரம் பேர் இறந்துள்ளனர்; எங்கள் பிராந்தியத்தில் இந்த இனப்படுகொலைக்கு மைக்ரோசாஃப்ட் அதிகாரம் அளிக்கிறது. இது உங்களுக்கு அவமானம். நீங்கள் உள்பட மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் அனைவரின் கைகளிலும் ரத்தக் கறை படிந்துள்ளது என்று தெரிவித்தனர்.

ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு பதிலளித்த முஸ்தபா, உங்கள் எதிர்ப்பு குறித்து பதில் அறிய முயல்கிறேன் என்று கூறினார். தொடர்ந்து, நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது, உங்கள் அனைவரின் குரல்களும் கேட்கும்வகையில், நாங்கள் சந்தர்ப்பம் வழங்குகிறோம்.

ஆனால், பணியிலோ வணிகத்துக்கோ இடையூறு விளைவிக்காத வகையில், இதைச் செய்ய வேண்டும். இடையூறு ஏதேனும் ஏற்பட்டால், அவர்கள் பணிநீக்கம் செய்யப்படுவர் என்று குறிப்பிட்டிருந்தனர். இஸ்ரேலுடனான ஒப்பந்துக்கு எதிர்ப்பு தெரிவித்த 5 ஊழியர்களை, நிறுவனம் பணிநீக்கம் பிப்ரவரி மாதம் செய்தது குறிப்பிடத்தக்கது.

நிகழ்ச்சியைத் தொடர்ந்து, மைக்ரோசாஃப்ட் ஊழியர்கள் சிலர் பணியைவிட்டும் விலகிச் சென்றனர்.

காசா மற்றும் லெபனான் இடையேயான போரில், குண்டுவெடிப்பு இலக்குகளைத் தேர்ந்தெடுக்க மைக்ரோசாஃப்ட் மற்றும் ஓபன்ஏஐயின் செயல் நுண்ணறிவு மாதிரிகளை இஸ்ரேல் ராணுவம் பயன்படுத்தியதாக விசாரணையில் தெரிய வந்தது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.