;
Athirady Tamil News

சொந்த ஊரிலிருந்தே இலங்கைக்கு பௌத்த சின்னங்களை அனுப்பவுள்ள மோடி..!

0

தனது சொந்த ஊரான குஜராத்தில் 1960 களில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியின் போது கண்டுபிடிக்கப்பட்ட புத்தரின் நினைவுச்சின்னங்கள் இலங்கைக்கு அனுப்பவுள்ளதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

அட்டமஸ்தானாதிபதியும் நுவரெலியாவின் பிரதான சங்கநாயக்கருமான பல்லேகம ஹேமரதன நாயக்க தேரரைச் சந்தித்து உரையாடிய போது மோடி அதனை மேற்கண்ட விடயத்தை கூறியுள்ளார்.

1960 குஜராத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியின் போது புத்தரின் நினைவுச்சின்னங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், அந்த நினைவுச்சின்னங்களை இலங்கையில் காட்சிப்படுத்துவதற்கான வாய்ப்பை வழங்குவது குறித்து இலங்கை ஜனாதிபதியுடன் கலந்துரையாடுவதாக பிரதமர் மோடி அதன்போது குறிப்பிட்டுள்ளார்.

அரசுமுறைப் பயணம்
புத்த கயாவை ஆன்மீக நகரமாகப் பாதுகாக்க அட்டமஸ்தானாதிபதி தேரர் விடுத்த கோரிக்கை குறித்தும் கவனம் செலுத்திய பிரதமர் நரேந்திர மோடி, இது குறித்து ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுடன் கலந்துரையாடி மேலும் நடவடிக்கை எடுப்பதாகவும் கூறியுள்ளார்.

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான “நூற்றாண்டு பழமையான நட்பு, வளமான எதிர்காலத்திற்கான பிணைப்பு” என்ற கருத்தை உறுதிப்படுத்தும் வகையில், இந்தியப் பிரதமர் இலங்கைக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டார்.

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில், இந்தியப் பிரதமர் இலங்கைக்கு இந்த அரசுமுறை விஜயத்தை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.