புங்குடுதீவு அம்பலவாணர் கலைப்பெருமன்றத்தின் எட்டாம் ஆண்டு நிறைவு விழா சிறப்பாக நடைபெற்றது.. (படங்கள்)

புங்குடுதீவு அம்பலவாணர் கலைப்பெருமன்றத்தின் எட்டாம் ஆண்டு நிறைவு விழா இன்றையதினம் அம்பலவாணர் கலைப்பெருமன்றம் மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. இலங்கை வடமாகாண பிரதம செயலாளர் திரு.இலட்சுமணன் இளங்கோவன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், விருந்தினர்கள் மாலை மரியாதையுடன் பாண்ட் வாத்தியம், தவில் நாதஸ்வர வாத்திய மரியாதையுடன் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டதுடன், கொடியேற்றல் நடைபெற்று மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமானது.
இதனைத் தொடர்ந்து அம்பலவாணர் கலைப்பெருமன்ற மண்டபம் நிறைந்த மக்களுடன் புங்குடுதீவு அம்பலவாணர் கலைப்பெரு மன்றத்தின் பொருளாளரும், முன்னாள் அதிபருமான திரு. எஸ்.கே. சண்முகலிங்கம் அவர்கள் நிகழ்வை தொகுத்து வழங்க முதலில் தவில், நாதஸ்வர இசைக் கச்சேரி நடைபெற்றதுடன், பின்னர் வரவேற்பு நடனம், இறைவணக்கம் ஆகியவற்றைத் தொடர்ந்து புங்குடுதீவு அம்பலவாணர் கலைப்பெரு மன்றத்தின் உபதலைவரும், முன்னாள் அதிபருமான திரு.ந.தர்மபாலன் அவர்களினால் வரவேற்புரை நிகழ்த்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து புங்குடுதீவு அம்பலவாணர் கலைப்பெரு மன்றத்தின் தலைவரும், இலங்கை வடமாகாண பிரதம செயலாளருமான திரு.இலட்சுமணன் இளங்கோவன் அவர்கள் தலைமையுரையாற்றினார். அதனைத் தொடர்ந்து பிரதம விருந்தினராக கலந்து கொண்ட வடமாகாண ஆளுநரின் பிரதிநிதி கௌரவிக்கப்பட்டு அவரது உரை நடைபெற்றது. அதேபோல் சுவிஸ் நாட்டை சேர்ந்த பன்முகக் கலைஞன் திரு.ரமணன் அவர்களும் கௌரவிக்கப்பட்டார். அதேவேளை வட மாகாண ஆளுஞர் திரு.வேதநாயகம் அவர்கள் நேரடி ஒளி,ஒலிப் பதிவின் ஊடாக சிறப்புரையாற்றினார்.
இதனைத் தொடர்ந்து புங்குடுதீவு அம்பலவாணர் கலைப்பெரு மன்றத்தின் செயலாளரும், பேராசிரியருமான திரு.கார்த்திகேசு குகபாலன் அவர்களின் சிறப்புரை நடைபெற்றது. அதேபோல் விருந்தினர்களான திரு.கை.சிவகரன் (பிரதேச செயலாளர் வேலணை), செல்வி.பொ.யமுனாதேவி (அறங்காவலர் – வட இலங்கை சர்வோதயம்), திரு.ச.ரமணன் (கலைஞர் சுவிஸ்), திருமதி.த.சுலோசனாம்பிகை (கலைப்பெருமன்ற நிர்வாகசபை உறுப்பினர்), திரு.த.இரத்தினராசா (போஷகர் கலைப்பெரு மன்றம் கனடா), திரு.கே.விநோதன் (அதிபர் புங்குடுதீவு மத்திய கல்லூரி), திரு.வேந்தன் (அதிபர் புங்குடுதீவு ஸ்ரீ கணேஷா மகா வித்தியாலயம்), திரு.க.தர்மகுணசிங்கம் (முன்னாள் அதிபர் புங்குடுதீவு மத்திய கல்லூரி) உட்பட அழைப்பிதழில் அழைத்த அனைத்து விருந்தினர்கள் ஆகியோருடன் இன்னும் சில விருந்தினர்களின் உரை இடம்பெற்றது.
விருந்தினர்களின் உரையுடன், கும்மி நடனம், கோலாட்டம், வாள் நடனம், குடக்கூத்து, கிராமிய நடனம், உலக்கை நடனம், தனி நடனம் குழு நடனம் போன்ற பல்வேறு நடன நாட்டிய நிகழ்வுகள், இன்னும் சில கலை நிகழ்ச்சிகளும், நடைபெற்றதுடன் நடனக் கலைஞர்கள், மற்றும் மாணவ மாணவிகளுக்கான பரிசில்கள் வழங்கல் போன்ற பல்வேறு நிகழ்வுகளுடன் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
இதேவேளை சுவிஸ் ரமணன் அவர்களின் தாயார் அமரர் சத்தியநாதன் கனகாம்பிகை அவர்களின் நினைவாக புலமைப்பரிசிலில் வெற்றி பெற்ற இரு மாணவர்களுக்கான துவிச்சக்கர வண்டிகள் அவரது நிதிப் பங்களிப்பில் வழங்கி வைத்தமையும் குறிப்பிடத்தக்கது.
நடனக் கலைஞர்களின் நிகழ்வுகள் உட்பட அனைத்து நிகழ்ச்சிகளும் எமது புங்குடுதீவு ஊர் சார்ந்து நிகழ்ந்தமை மனத்தைக் குளிர வைத்ததாக கலந்து கொண்ட அனைவரும் குறிப்பிட்டமை சிறப்பம்சமாகும்.
படங்கள் -திருமதி.சுகந்தா
(புங்குடுதீவு அம்பலவாணர் கலைப்பெருமன்றம்)
தகவல் -சுவிஸ்ரஞ்சன்
(புங்குடுதீவு அம்பலவாணர் கலைப்பெருமன்ற உப செயலாளர்)
https://www.athirady.com/tamil-news/infomation/1758096.html