;
Athirady Tamil News

சுவிட்சர்லாந்தின் COVID-19 தடுப்பூசி வீணாக்கம்: 1.3 பில்லியன் சுவிஸ் பணம் நஷ்டம்

0

சுவிட்சர்லாந்தில் 1.3 பில்லியன் சுவிஸ் பிராங்குகள் மதிப்புள்ள COVID-19 தடுப்பூசி வீணடிக்கப்பட்டுள்ளது.

வீணான COVID-19 தடுப்பூசிகள்
பயன்படுத்தப்படாமல் காலாவதியான COVID-19 தடுப்பூசிகள் காரணமாக CHF 1.3 பில்லியனுக்கும் (US$ 1.5 பில்லியன்) அதிகமான நிதி இழப்பை சுவிட்சர்லாந்து சந்தித்து இருப்பதாக அந்நாட்டு அரசாங்கம் அதிர்ச்சியூட்டும் தகவலை வெளியிட்டுள்ளது.

Sonntagszeitung மற்றும் Le Matin Dimanche ஆகிய முன்னணி செய்தித்தாழ்கள் இந்த விவகாரத்தை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தன.

பின்னர், பெடரல் நிதி நிர்வாகம் (Federal Finance Administration) இதனை Keystone-SDA செய்தி நிறுவனத்திற்கு உறுதிப்படுத்தியுள்ளது.

கால் பங்கு மருந்து மட்டுமே பயன்படுத்தப்பட்டதா?
வெளியான தகவல்களின்படி, 2020 முதல் 2023 வரை சுவிட்சர்லாந்தால் கொள்முதல் செய்யப்பட்ட COVID-19 தடுப்பூசி மருந்துகளில் கால் பங்கிற்கும் குறைவான அளவே மக்களுக்கு போடப்பட்டுள்ளது என தெரியவந்துள்ளது.

இந்த காலகட்டத்தில், சுவிஸ் அரசாங்கம் COVID-19 தொடர்பான மருத்துவ பொருட்கள் வாங்குவதற்காக சுமார் CHF 2.3 பில்லியன் தொகையை முதலீடு செய்து இருந்தது.

இதில், சுவிட்சர்லாந்திற்குள் பயன்படுத்தப்பட்டது வெறும் CHF 570 மில்லியன் மதிப்புள்ள பொருட்கள் மட்டுமே.

மேலும், CHF 270 மில்லியன் மதிப்புள்ள தடுப்பூசிகள் மனிதாபிமான அடிப்படையில் பிற நாடுகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.

இருப்பினும் இதன் விளைவாக, CHF 1.45 பில்லியன் மதிப்புள்ள மருத்துவப் பொருட்கள் எஞ்சியுள்ளன.

அரசாங்கத்தின் நிதி அறிக்கைகளின் படி, இந்த மீதமுள்ள தொகை மதிப்பீடு சரிசெய்யப்பட்டது.

பெடரல் நிதி நிர்வாகம் அளித்த விளக்கத்தின்படி, அரசாங்கத்தின் மதிப்பு சரிசெய்தல்களில் 90% க்கும் அதிகமானவை காலாவதி திகதியை கடந்ததால் தூக்கி எறியப்பட்ட COVID-19 தடுப்பூசிகளுடன் தொடர்புடையது.

இந்த வீணாக்கப்பட்ட தடுப்பூசிகளின் மதிப்பு மட்டும் CHF 1.3 பில்லியனுக்கும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.