;
Athirady Tamil News

முட்டை கேட்ட பள்ளி மாணவனை துடைப்பத்தால் அடித்த சத்துணவு ஊழியர்கள் கைது

0

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே உள்ள செங்குணம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஏராளாமான மாணவர்கள் படித்து வருகின்றனர்.

இந்த பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இப்பள்ளியில் நேற்று மதிய உணவின்போது மாணவர்களுக்கு முட்டை சரிவர வழங்கப்படவில்லை.

அப்போது, 5ஆம் வகுப்பு மாணவன் தனக்கு முட்டை வேண்டும் என கூறிய நிலையில் அதற்கு சத்துணவு ஊழியர் முட்டை இல்லை என்று கூறியுள்ளார்.

இதையடுத்து அந்த மாணவன் சமையலறை சென்று பார்த்தபோது முட்டை இருந்துள்ளது. முட்டைகளை வைத்துக்கொண்டே ஏன் இல்லை என கூறுகிறீர்கள்? என்று மாணவன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த சத்துணவு ஊழியர்களான சமையலர் லட்சுமி, உதவியாளர் முனியம்மாள் , “ஏன் சமையலறை சென்று பார்த்தாய்” எனக் கூறி அந்த மாணவனை வகுப்பறைக்குள் புகுந்து அங்கிருந்த துடைப்பத்தால் தாக்கினர்.

இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதை தொடர்ந்து சமையலர் லட்சுமி மற்றும் உதவியாளர் முனியம்மாளை சஸ்பெண்ட் செய்து மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவிட்டார்.

மேலும், அந்த பள்ளியை சேர்ந்த 2 ஆசிரியர்களை பணியிடமாற்றம் செய்தும் உத்தரவிட்டார்.

சத்துணவு ஊழியர்களான சமையலர் லட்சுமி மற்றும் உதவியாளர் முனியம்மாளை போளூர் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.