மட்டக்களப்பில் மகன் தாக்கி தாய் மரணம்

வீட்டு வளாகத்தில் பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் வாழைச்சேனை காவல்துறை பிரிவுக்குட்பட்ட நாவலடி – கேணிநகர் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் 72 வயது நாவலடி பெண் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மகனுடன் ஏற்பட்ட தகராறு
மகனுடன் ஏற்பட்ட தகராறு அதிகரித்ததைத் தொடர்ந்து மகன் தாக்கியதில் குறித்த பெண் உயிரிழந்திருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் உடைந்த துடைப்பம் மற்றும் தடி ஆகியவை காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்நிலையில், இந்தக் கொலையுடன் தொடர்புடைய 42 வயது சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும், வாழைச்சேனை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.