;
Athirady Tamil News

பேபி நீங்கள் வரவில்லை.., உயிரிழந்த விமானியின் உடலை பார்த்து கதறி அழுத நிச்சயிக்கப்பட்ட பெண்

0

விமானத்தில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் விமானப் படை பைலட் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நிச்சயிக்கப்பட்ட பெண் அழுகை
இந்திய மாநிலமான குஜராத், ஜாம்நகரிலிருந்து விமானப்படையின் ஜாக்குவார் ரக போர் விமானம் பயிற்சிக்காக சில தினங்களுக்கு முன்பு புறப்பட்டது.

இந்த விமானத்தில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் அதில் இருந்த இரண்டு விமானிகள் வெளியேற முடிவு செய்தனர்.

இதில் ஒரு பைலட் பாராசூட் மூலம் தரையிறங்கி சிறு காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஆனால், மற்றொரு பைலட் சித்தார்த் யாதவ் வெளியேற முடியாமல் இருந்தார்.

பின்னர், விமானமானது ஜாம்நகர் அருகேயுள்ள வயலில் விழுந்து தீப்பிடித்து எரிந்ததில் சித்தார்த் யாதவ் உயிரிழந்தார்.

இந்நிலையில், நேற்று அவரது உடல் ராணுவ மரியாதையுடன் ஹரியானா மாநிலத்தில் தகனம் செய்யப்பட்டது. அப்போது, அவருக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட சானியா என்பவர் சித்தார்த் யாதவின் உடலை பார்த்து கதறி அழுதார்.

சமூக வலைதளத்தில் பரவும் வீடியோவில் அந்த பெண், “கடைசியாக ஒரு முறை நான் பார்த்துக் கொள்கிறேன். பேபி நீங்கள் என்னை அழைத்துச் செல்ல வரவில்லை. எனக்கு நீங்கள் சத்தியம் செய்தீர்கள்” என்று கூறி கதறி அழுதுள்ளார். இது காண்போரை கண்கலங்க வைத்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.