மாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் மஹா கும்பாபிஷேகம்

வரலாற்றுச் சிறப்புமிக்க மாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி ஆலய மஹா கும்பாபிஷேகம் இன்றையதினம் மிகச் சிறப்பாகவும் பக்தி பூர்வமாகவும் நடைபெற்றது.
ஆலய பிரதம குரு இரத்தினசபாபதி குருக்கள் தலைமையில் கிரியை வழிபாடுகள் நடைபெற்றது.
50 ஆண்டுகளுக்குப் பின்னர் நடைபெறும் குறித்த கும்பாபிஷேக விழாவில் பல்வேறு ஆதீனங்களின் குரு முதல்வர்களும் கலந்து கொண்டனர்.
கும்பாபிஷேகத்தில் தாயகத்திலிருந்தும் புலம்பெயர் தேசங்களில் இருந்தும் வருகைதந்த பலரும் கலந்துகொண்டனர்.
படங்கள் – ஐ. சிவசாந்தன்