ரயிலுடன் மோதிய முச்சக்கர வண்டி ; இருவர் படுகாயம்

கொஸ்கம – அளுத்அம்பலம் ரயில் கடவைக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு பேர் படுகாயமடைந்துள்ளதாக கொஸ்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து இன்று சனிக்கிழமை (12) காலை இடம்பெற்றுள்ளது.
முச்சக்கரவண்டி ஒன்று அவிசாவளையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த ரயிலுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தின் போது முச்சக்கரவண்டியில் பயணித்த இருவர் படுகாயமடைந்துள்ள நிலையில் அவிசாவளை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொஸ்கம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.