;
Athirady Tamil News

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் ஜனாதிபதி அநுர வெளியிட்ட அதிரடி அறிவிப்பு

0

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளோம் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.

கிண்ணியா நகர சபை மைதானத்தில் நேற்று (12) மாலை இடம் பெற்ற பொதுக் கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்த அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தவே எமது தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் செயற்படுகிறது கடந்த காலங்களில் திகன, மாவனல்லை என பல பிரச்சினைகள் உருவாகியது

ஆனால் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிபீடமேறி ஆறு மாதங்களே அவ்வாறான பிரச்சினைகள் இல்லாமல் வாழ்கிறீர்கள் இதற்காக அனைவரும் நாட்டை கட்டியெழுப்ப ஒற்றுமையாக பயணிக்க வேண்டியுள்ளது.

எனவே தான் இம் முறை தேர்தலில் கிண்ணியா நகர சபை மற்றும் பிரதேச சபை அதிகாரத்தை தேசிய மக்கள் சக்திக்கு வழங்குங்கள். பலர் சமூக ஊடகங்களில் பொய் பிரச்சாரங்களை மேற்கொள்கின்றனர் இவர்களை பார்த்தால் பின்னால் மரம் உள்ளது .

அம்பாறையில் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேசிய மக்கள் சக்தி சார்பில் தெரிவானார்கள் நால்வரும் சிங்கள சமூகத்தை சேர்ந்தவர்கள் இதனை கருத்திற் கொண்டு தேசிய மக்கள் சக்தி கட்சி தீர்மானத்துக்கு அமைவாக ஆதம்பாவை தேசிய பட்டியல் ஊடாக கொடுத்து முஸ்லீம் சமூகத்தை கௌரவப்படுத்தியுள்ளோம்.

இனவாத பிரச்சினைகளை இந்த நாட்டில் உருவாக்க தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஒரு போதும் இடமளிக்காது .

2019ல் ஈஸ்டர் தாக்குதலால் 250க்கும் மேற்பட்ட உயிர்கள் பலியானதுடன் 500க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தார்கள் இதனால் முஸ்லீம் சமூகம் பெரும் துன்பத்தை எதிர்கொண்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.