;
Athirady Tamil News

ஹிந்து மதம் குறித்து தவறாக பேசினால் தண்டனை – அமெரிக்க மாகாணத்தில் வர உள்ள சட்டம்

0

உலக நாடுகள் சிலவற்றில், குறிப்பிட்ட மதம் குறித்து அவதூறாக பேசினால் கடும் தண்டனை விதிக்கப்படும்.

ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் இஸ்லாம் மதம் குறித்து விமர்சித்தால் மரண தண்டனை விதிக்குமளவுக்கு சட்டத்தில் இடம் உண்டு.

மசோதா கொண்டு வந்த ஜோர்ஜியா
அதே போல், அமெரிக்கா மாகாணம் ஒன்று ஹிந்து மதம் குறித்து அவதூறாக பேசுவதை குற்றமாக அங்கீகரிக்கும் வகையிலான மசோதா ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் கிட்டத்தட்ட 2.5 மில்லியன் ஹிந்துக்கள் வசிப்பதாக கூறப்படுகிறது. இது அமெரிக்காவின் மொத்த மக்கள் தொகையில் 0.9% ஆகும். இதில் ஜோர்ஜியாவில் மட்டும் 40,000 க்கும் அதிகமான ஹிந்துக்கள் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், அமெரிக்காவில் முதல் மாகாணமாக ஜோர்ஜியாவில் இந்த மசோதா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த மசோதா, இனம், நிறம், மதம் அல்லது தேசிய வம்சாவளியை அடிப்படையாகக் கொண்ட பாகுபாட்டைத் தடைசெய்யும் சட்டங்களின் கீழ் இந்து வெறுப்பைச் சேர்க்க முயல்கிறது.

இந்த மசோதா சட்டமாக நிறைவேற்றப்பட்டால், வெறுப்பு குற்றங்கள் மற்றும் பாகுபாடுகளுக்கு எதிரான தற்போதைய சட்டங்களை அமல்படுத்தும்போது மாநில மற்றும் உள்ளூர் சட்ட அமலாக்க நிறுவனங்கள் இந்து வெறுப்பைக் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கட்டளையிடும்.

ஏப்ரல் 2023 ஆம் ஆண்டு, ஜார்ஜியா இந்து வெறுப்பைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றிய போது தொடங்ங்கப்பட்ட பணியின் நீட்டிப்பாகும்.

“கடந்த சில ஆண்டுகளில், நாடு முழுவதும் இந்துக்களுக்கு எதிரான வெறுப்பு, குற்றங்கள் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்து வருவதைக் கண்டோம்,” என்று மசோதாவை அறிமுகப்படுத்திய செனட் உறுப்பினர் ஷான் ஸ்டில் கூறியுள்ளார்.


ஜோர்ஜியா மாகாணம் அறிமுகப்படுத்தியுள்ள இந்த மசோதாவை, அமெரிக்க மற்றும் இந்தியாவில் உள்ள ஹிந்து அமைப்புகள் வரவேற்றுள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.