தலதா மாளிகைக்கு விசேட பாதுகாப்பு! வெளியான காரணம்

தலதா மாளிகையில், பொலிஸாருக்கு மேலதிகமாக இராணுவத்தினரையும் பாதுகாப்பிற்காக ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
தலதா மாளிகையில் புனித தந்த தாது தரிசனம் மக்களுக்கு வழங்கப்படவுள்ளது.
புனித தந்த தாது தரிசனம்
இதன்படி, தலதா மாளிகையில் புனித தந்த தாது தரிசனம் 18 -27 ஆம் திகதி வரை நடைபெற உள்ளது.
இந்நிலையில், தரிசனத்திற்கு வருகை தரும் மக்களின் பாதுகாப்பிற்காக இவ்வாறு பொலிஸார் உட்பட இராணுவத்தினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.
மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கீழ் உள்ள அனைத்து இராணுவப் பிரிவுகளும் இராணுவத் தளபதியின் வழிகாட்டுதலின் கீழ் இதற்காகப் பயன்படுத்தப்படுமென தெரிவிக்கப்படுகின்றது.