ஆந்திராவில் பட்டாசு தொழிற்சாலையில் வெடி விபத்து ; 8 பேர் பலி

ஆந்திர பிரதசேம் மாநிலம், அனகபள்ளி மாவட்டத்தில் உள்ள கைலாசப்பட்டினத்தில் பட்டாசு தொழிற்சாலையில் வெடி விபத்து ஏற்பட்டது.
இதனால், பட்டாசுகள் வெடித்து சிதறியுள்ளதுடன் அங்கு இருந்த ஏராளமானோர் தீக்காயமடைந்துள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் தீயை கடும் போராட்டத்திற்கு பிறகு அணைத்துள்ளனர்.
மேலும், தீ விபத்தில் சிக்கியவர்களையும் மீட்டனர். இந்த தீ விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், படுகாயமடைந்த 7 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள பொலிஸார் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.