;
Athirady Tamil News

ஒரு மணி நேர பயணம் ஒரு நிமிடத்தில் – உலகின் உயரமான பாலத்தை திறக்க உள்ள சீனா

0

சீனா ஹுவாஜியாங்க் என்ற பகுதியில் உலகிலேயே உயரமான பாலத்தை கட்டி வருகிறது.

உலகின் உயரமான பாலம்
ஹூவாஜியாங் பள்ளத்தாக்கிற்கு(Huajiang Grand Canyon Bridge) நடுவே அமைக்கப்படும் இந்த பாலத்திற்கான கட்டுமான பணியை, கடந்த 2022ஆம் ஆண்டே தொடங்கி விட்டது.

2 மைல் நீளத்திற்கு நீண்டுள்ள இந்த பாலம், உலகின் உயரமான பாலமாக( 2050 அடி உயரம்) கருதப்படுகிறது.

இந்த பாலம் பாரிஸில் உள்ள ஈபிள் டவரை விட, 200 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. ஈபிள் டவரின் உயரம் 330 மீட்டர் (1,083 அடி) ஆகும்.

இந்த பாலத்திற்கான கட்டுமானப் பணிக்காக, 22 ஆயிரம் மெட்ரிக் டன் ஸ்டீல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் ஈபிள் டவர் அமைக்கப்பட்ட தேவையான இரும்பை விட 3 மடங்கு அதிகம் ஆகும்.

ரூ.2,200 கோடி செலவில் கட்டப்படும் இந்த பாலம், வரும் ஜூன் மாதம் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பாலம் பயன்பாட்டிற்கு வருவதன் மூலம், ஒரு மணி நேரம் பயண தூரம் ஒரு நிமிடமாக குறையும் என கூறப்படுகிறது.

2016 ஆம் ஆண்டில், சீனாவின் மிக உயரமான பாலம் பெய்பன்ஜியாங்கில் கட்டப்பட்டது. இது 1,854 அடி உயரத்தில் அமைக்கப்பட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.