பல மில்லியன் வருமானமானத்தை குவித்த இலங்கை போக்குவரத்து சபை

கடந்த 4 நாட்களில் இலங்கை போக்குவரத்து சபை, 600 மில்லியன் ரூபாயை வருமானமாக ஈட்டியுள்ளது.
பண்டிகைக் காலத்தையொட்டி அதிகளவான பேருந்துகள் சேவையில் ஈடுபட்டமையினால் இந்த வருமானத்தை ஈட்ட முடிந்துள்ளது.
நாளொன்றுக்கு சுமார் 200 மில்லியன் ரூபாய் வரை வருமானமாக ஈட்ட முடிந்ததாக இலங்கை போக்குவரத்து சபை பிரதிப் பொது முகாமையாளர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வருடம் தமிழ்,சிங்களப் புத்தாண்டையொட்டி பொதுமக்களின் வசதிக்காக சுமார் 350 பேருந்துகள் மேலதிகமாக இயக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.