காஸா: தாக்குதலை தீவிரப்படுத்தியது இஸ்ரேல்

காஸாவில் நடத்திவரும் தாக்குதலை இஸ்ரேல் ராணுவம் தீவிரப்படுத்தியுள்ளது. அந்தப் பகுதி முழுவதும் இஸ்ரேல் நடத்திய விமானத் தாக்குதலில் அல்-அஹில் அரபு மருத்துவமனை உள்ளிட்ட கட்டடங்கள் சேதமடைந்தன.
இதில் சிறுவா்கள் உள்பட 21 போ் உயிரிழந்தனா்.இத்துடன், காஸாவில் இஸ்ரேல் ராணுவம் சுமாா் ஒன்றரை ஆண்டுகளாக நடத்திவரும் தாக்குதலில் இதுவரை 50,983 பாலஸ்தீனா்கள் உயிரிழந்துள்ளனா்; 1,16,274 போ் காயமடைந்துள்ளனா் என்று அந்தப் பகுதி சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக அமெரிக்கா, எகிப்து, கத்தாா் நாடுகள் மேற்கொண்டுவந்த முயற்சியின் பலனாக, இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே கடந்த ஜன. 19 முதல் ஆறு வாரங்களுக்கு போா் நிறுத்தம் கடைப்பிடிக்கப்பட்டாலும், அது நீட்டிக்கப்படவில்லை