8 மாத கர்ப்பிணி மனைவியை கழுத்தை நெரித்து கொன்ற காதல் கணவர்

இந்திய மாநிலம் ஆந்திர பிரதேசத்தில் இளைஞர் ஒருவர், தனது கர்ப்பிணி காதல் மனைவியை கழுத்தை நெரித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
காதலித்து திருமணம்
விசாகப்பட்டினம் அருகேயுள்ள யுடா பகுதியைச் சேர்ந்த ஞானேஷ்வர் (27) என்பவர் பாஸ்ட்புட் உணவகத்தை நடத்தி வருகிறார்.
இவர் அனுஷா (27) என்ற பெண்ணை, கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
எட்டு மாத கர்ப்பிணியான மனைவி அனுஷாவுக்கும், ஞானேஷ்வருக்கும் இடையே கடந்த சில மாதங்களாக கருத்து வேறுபாடு நிலவி வந்துள்ளது.
கழுத்தை நெரித்து கொலை
இந்த நிலையில், கணவன் மனைவிக்கு இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டபோது, ஞானேஷ்வர் காதல் மனைவி அனுஷாவின் கழுத்தை நெரித்துள்ளார்.
இதில் அனுஷா மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கியதையடுத்து மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.