கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் கைவிசேடம் வழங்கும் நிகழ்வு

பிறந்துள்ள தமிழ் சிங்கள புத்தாண்டினை சிறப்பிக்கும் வகையில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் கைவிசேடம் வழங்கும் நிகழ்வு இன்று(15) காலை நடைபெற்றது.
குறித்த நிகழ்வு, கிளிநொச்சி மாவட்ட செயலக அரச அதிபர் அலுவலகத்தில் கைவிசேடம் வழங்கும் புண்ணிய நிகழ்வு காலை 9.00 நடைபெற்றது.
கிளிநொச்சி மாவட்ட செயலக ஊழியர் நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில், ஊழியர் நலன்புரி சங்க தலைவர் த.ராமபிரியந்தன் தலைமையில் நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்வில், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் எஸ். முரளிதரன் கலந்து கொண்டு, பிறந்திருக்கின்ற புதுவருடம் அனைவரது எதிர்பார்ப்புக்களும் நிறைவேறும் வகையில் சுபீட்சமான வருடமாக அமைய வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டதுடன் உத்தியோகத்தர்கள் அனைவருக்கும் கைவிசேடத்தினை வழங்கி வைத்தார்.
பெரியோரிடமிருந்து கைவிசேடம் பெறுதல் என்பது ஆண்டு முழுவதும் பண வரவும், நன்மைகளும் கிடைக்கப்பெறும் எனும் நம்பிக்கையின் அடிப்படையில் பாரம்பரியமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகின்ற சிறப்பம்சமாகும்.
இந் நிகழ்வில் மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள்,கிளைத் தலைவர்கள், உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.