சிறிய தீவில் 2 சடலங்களும் 39 புலம்பெயர் மக்களும்… கண்டுபிடித்த கிரேக்க கடலோர காவல்படை
ஏஜியன் கடலில் உள்ள ஃபார்மகோனிசி என்ற சிறிய தீவில் இரண்டு பெண்களின் சடலமும் 39 புலம்பெயர்ந்தோரையும் கண்டுபிடித்ததாக கிரேக்க கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.
புலம்பெயர் மக்கள்
இந்த விவகாரத்தில் என்ன நடந்தது என்பதைக் கண்டறிய விசாரணை நடந்து வருவதாகவும், இறப்பு தொடர்பில் தகவலேதும் தெளிவாக இல்லை என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
துருக்கிய கடற்கரையிலிருந்து வெறும் 6 மைல் தொலைவில் உள்ள தீவை, புலம்பெயர் மக்கள் அதிகாலையில் அடைந்ததாக கிரேக்க அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்பட்டதாக கடலோர காவல்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.
படகு விபத்தில் சிக்கியதாக இருக்கலாம் என்ற கோணத்தில் எஞ்சியவர்களையும் தேடி வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மீட்கப்பட்டவர்கள் அருகிலுள்ள லெரோஸ் தீவுக்கு மாற்றப்பட்டனர்.
மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவிலிருந்து குடியேறுபவர்கள் மற்றும் அகதிகளுக்கு ஐரோப்பாவிற்குள் நுழைவதற்கான விருப்பமான நுழைவாயிலாக ஐரோப்பிய ஒன்றியத்தின் தென்கிழக்கு மூலையில் உள்ள கிரீஸ் நீண்ட காலமாக இருந்து வருகிறது.
2015 முதல் கிரீஸ் கடலோர காவல்படை 250,000 க்கும் மேற்பட்டவர்களை மீட்டுள்ளது. இந்த மாதம், லெஸ்போஸ் தீவில் படகு மூழ்கியதில் ஒரு சிறுவன், ஒரு சிறுமி மற்றும் இரண்டு பெண்கள் உட்பட குறைந்தது ஏழு புலம்பெயர்ந்தோர் நீரில் மூழ்கி இறந்தனர்.
