வவுனியாவில் சங்கு சின்னத்தின் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் வேட்பாளர் அறிமுக நிகழ்வு.. (படங்கள்)
வவுனியாவில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் வேட்பாளர் அறிமுக நிகழ்வு இன்று (20.04) இடம்பெற்றது.
வவுனியா இரண்டாம் குறுக்கு தெருவில் அமைந்துள்ள விருந்தினர் விடுதியில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஈபிஆர்எல்எப் கட்சியின் செயலாளர் நாயகமுமான ந.சிவசக்தி ஆனந்தன் தலைமையில் இந் நிகழ்வு இடம்பெற்றது.
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி சங்கு சின்னத்தில் வவுனியா மாநகர சபை உட்பட நான்கு உள்ளூராட்சி மன்றங்களில் போட்டியிடுகின்றது.
இந் நிகழ்வில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் செயலாளர் குருபரன், நாடாளுமன்ற உறுப்பினரும் ரெலாே அமைப்பின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன், புளாெட் அமைப்பின் வவுனியா மாவட்டப் பொறுப்பாளர் சந்திரகுலசிங்கம் மோகன், புளொட் அமைப்பின் தொழிற்சங்கப் பொறுப்பாளர் காண்டீபன் உட்பட புளொட் பிரதிநிகள் ஜனநாயக பாேராளிகள் கட்சியின் பிரதிநிகள் மற்றும் வவுனியா மாநகர சபை, வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை, செட்டிகுளம் பிரதேச சபை, வவுனியா வடக்கு பிரதேச சபை ஆகிய உள்ளூராட்சி மன்றங்களின் வேட்பாளர்கள், கட்சி ஆதரவாளர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.






