உலகின் முதல் 10G கிளவுட் இணைய சேவையை வெளியிட்ட சீனா
உலகின் முதல் 10G கிளவுட் இணைய சேவையை சீனா வெளியிட்டுள்ளது.
சீனாவின் ஹூவாய் (Huawei) நிறுவனமும், சர்வதேச தொலைத்தொடர்பு நிறுவனமான சைனா யூனிகாம் (China Unicom) நிறுவனமும் இணைந்து, பெய்ஜிங்கின் அருகே உள்ள ஹெபெய் மாகாணத்தின் சியோங்அன் பகுதியில், உலகின் முதலாவது 10G cloud broadband சேவையை அறிமுகப்படுத்தியுள்ளன.
இது 50G PON (Passive Optical Network) தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டிருப்பதால், இதன் மூலம் 9,834 Mbps வேகத்தில் தரவுகளை டவுன்லோடு செய்யவும், 1,008 Mbps வேகத்தில் அப்லோடு செய்யவும் முடிகிறது.
இதன் மூலம் 90GB அளவுள்ள கோப்புகள் (Files) சில விநாடிகளில் தரவிறக்க (download) முடிகிறது.
இது வழக்கமான வீட்டு பிராட்பாண்டை விட 10 மடங்கு வேகமுள்ளதுடன், latencys (தாமத நேரம்) மிகக் குறைவாக உள்ளது.
இதன் மூலம் 8K வீடியோக்கள், மேம்பட்ட கிளவுட் கம்ப்யூட்டிங், VR மற்றும் AR அனுபவங்களை துல்லியமாக அனுபவிக்க முடியும்.
மேலும், சைனா இதுவரை 4.25 மில்லியன் 5G பேஸ் ஸ்டேஷன்களை நிறுவியுள்ளதோடு, Chang Guang Satellite Technology நிறுவனம் 100 Gbps வேகத்தில் செயற்கைக்கோள் லேசர் தகவல்தொடர்பு சாதனை படைத்துள்ளது. இது Starlink வேகத்தை 10 மடங்கு மிஞ்சுகிறது.
இது டிஜிட்டல் உலகில் சீனாவின் அதிவேக முன்னேற்றத்திற்கு மிகப் பாரிய அடையாளமாகும்.