;
Athirady Tamil News

அம்மாவை விடுவியுங்கள்

0

அரசியல் காரணங்களுக்காக சிறையில் இருக்கும் தனது தாயாரான தயாபரராஜ் உதயகலாவை
அவரது உடல்நலம் கருதியும், சிறுவர்களான எமது நலன்கருதியும் சிறையிலிருந்து வெளியில் வருவதற்கான வாய்ப்பை ஜனாதிபதி ஏற்படுத்தி தரவேண்டும் என குறித்த பெண்ணின் மகள் டிலானி தயாபரராஜ் கோரிக்கை விடுத்துள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை தனது பேத்தியாரான அருனோதயனாதன் ரஜனியுடன் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டே கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

சர்வமக்கள் கட்சியின் உருவாக்கத்தால் பிள்ளையானுடன் ஏற்பட்ட முறண்பாடுகளால் தனது தயார் தண்டனைக் கைதியாக சிறையில் இருக்கின்றார்.

எமது தாயார் அரசியல் சூழ்ச்சி காரணமாக சிறையில் இருப்பதால் நாம் நான்கு சகோதரர்களும் பாட்டியின் பராமரிப்பில் தற்போது பல அசௌகரியங்களுடன் வாழ்ந்து வருகின்றோம் .

இந்நேரம் சிறையிலிருக்கும் எமது தாயார் குற்றம் செய்யாது சிறையில் இருப்பதால் பல்வேறு உடல் உபாதைகளுக்கும் மன உழைச்சலுக்கும் உள்ளாகி மருத்துவ வசதி கூட கிடையாத நிலையில் இருக்கின்றார்.

அதனால் எமது குடும்ப நிலையையும் பிள்ளைகளான எமது நிலையையும் கருத்தில் கொண்டு தாயாரை மனிதாபிமானமான நடவடிக்கையாக விடுவிக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்

You might also like

Leave A Reply

Your email address will not be published.