;
Athirady Tamil News

கனடா அமெரிக்காவின் 51வது மாநிலமாக வேண்டும் ; டிரம்ப் மீண்டும் வலியுறுத்து

0

கனடா, அமெரிக்காவின் 51வது மாநிலமாக வேண்டும்” என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

கனடாவின் நடைபெறும் தேர்தல் தொடர்பாக அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.

தனது பழைய கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கனடா எங்களுடன் இயற்கையாக இணைவது சிறந்தது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

“கனடா மக்களுக்கு வாழ்த்துகள். உங்கள் வரிகளை பாதியாக குறைக்கும், உங்கள் இராணுவ சக்தியை உலகில் உயர்ந்த நிலைக்கு இலவசமாக உயர்த்தும், உங்கள் கார்கள், உருக்கு, அலுமினியம், மரப்பொருட்கள், எரிசக்தி மற்றும் பிற தொழில்கள் நான்கு மடங்காக வளரும் வாய்ப்பை தரும் நபரை தேர்ந்தெடுங்கள் என ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் எல்லா வரி, தடையில்லாமல் வர்த்தகம் நடைபெறும்; இது உங்கள் மக்களுக்கு பெரும் பயன் தரும்,” என்று அவர் கூறியுள்ளார். மேலும், அமெரிக்கா, கனடாவுக்கு ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர் வர்த்தகம் வழங்குவதை தொடர முடியாது.

இது மாநிலமாக இருந்தால் மட்டுமே நியாயமானது,” என்று டிரம்ப் வலியுறுத்தியுள்ளார்.

“புதிய கனடிய நிர்வாகத்துடன் அமெரிக்கா இணைந்து பணிபுரியும் என அமெரிக்க வெளியுறவுத் துறை செயலாளர் மார்கோ ரூபியோ குறிப்பிட்டுள்ளார்.

“ஒரு மாநிலமாக இருப்பது சிறப்பாக வேலை செய்யும்,” என்று டிரம்ப் கூறினார். இதற்கு முன்பு அவர், பொருளாதார அழுத்தத்தின் மூலம் கனடாவை 51வது மாநிலமாக்குவேன் என்று மிரட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

“கனடாவிடமிருந்து எமக்கு எதுவும் தேவையில்லை, கார்கள் மற்றும் எண்ணெய் உட்பட, எதுவும் தேவையில்லை என டிரம்ப் தெரிவித்திருந்தார்.

“நாம் எங்கள் சொந்த கார்கள் தயாரிக்க விரும்புகிறோம். வெளிநாட்டு கார்களை தேவையின்றி வாங்க விரும்பவில்லை,” என்று அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் கனடிய பிரதமர் மார்க் கார்னியுடன் நடந்த தொலைபேசி உரையாடலுக்குப் பிறகு, டிரம்ப் கனடாவை 51வது மாநிலமாக்கும் பேச்சை சிறிது குறைத்திருந்தார்.

மேலும், கனடிய பொருட்கள் மீது தனித்தனி 25% வரிகளும் விதிக்கப்பட்டுள்ளன, இது பெரும்பாலும் போதைப் பொருள் கடத்தலை கட்டுப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக அமெரிக்கா கூறுகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.